பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் வைல்ட் கார்டில் கானா பாலா,அர்ச்சனா,அன்னபாரதி,தினேஷ் மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப் இருப்பதால் பாதுகாப்பு குறைவாக இருப்பதால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்துள்ளனர்.இதனால் கமல்ஹாசனும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.இது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.தற்போது இவருக்கு ஆதரவாக குரல் ஒலித்துக்கொண்டு உள்ளது.தற்போது பிக் பாஸுக்கு பதிலடி கொடுப்பது போல குடும்பத்துடன் ரெட் கார்ட் வெளியேற்றத்தை கொண்டாடி இருக்கிறார் பிரதீப்,இந்நிலையில் பிரதீப்பை மீண்டும் பிக் பாஸ் குழுவினர் அழைத்துள்ளனர்,அதற்கு பிரதீப் இப்போ நான்கு ஐந்து தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேக்க ஆரம்பிச்சிருக்காங்க,நான் இப்போ கோவா போறேன்,விரைவில் நல்ல கதை உடன் திரும்பி வருவேன் என அவருடைய எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
https://twitter.com/TheDhaadiBoy/status/1726115195507093632?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1726115195507093632%7Ctwgr%5Ee424ae518cebbfffefa286d1cb5f5a23a7bae2d2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fpradeep-tweet-about-his-movie-and-bigg-boss7-1700462759
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in