மக்களின் இளவரசனா மகுடம் சூடினானா? பிரின்ஸ் – திரைவிமர்சனம் (?/5)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.மேலும் இவர்களுடன் நடிகர் சத்யராஜ்,பிரேம்ஜி,பிராங்க் ஸ்டார் ராகுல் என பலரும் நடித்துள்ளார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் கிளப்பியது.இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

மக்களின் இளவரசனா மகுடம் சூடினானா? பிரின்ஸ் - திரைவிமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

ஜாதி மதம் முக்கியமில்லை மனிதமும் மனிதனும் தான் முக்கியம் என்ற கொள்கை கொண்டவராக வருகிறார் சத்யராஜ்.அவரது மகன் தான் சிவகார்த்திகேயன்.பாண்டிசேரியில் உள்ள பள்ளி ஒன்றில் சிவகார்த்திகேயன் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி குடும்பத்துடன் அங்கு தங்கி வருகிறார்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலை செய்யும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வருகிறார் கதாநாயகி மரியா.வெளிநாட்டு காரியான இவரை கண்டு காதலில் விழுகிறார் சிவகார்த்திகேயன்.தனது காதலை மரியாவிடம் கூற அதனை மரியா ஏற்க மறுக்கிறார்.பின்னர் மரியாவை காதலித்தே ஆக வேண்டும் என அவர் பின்னல் சுற்றி இம்ப்ரெஸ் செய்கிறார்.ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் செயல்களை பார்த்து மரியாவுக்கும் காதல் மலர்கிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விவேக் இணைந்து நடித்த யாதும் ஊரே யாவரும் கேளீர் ட்ரைலர் வெளியாகியது

மக்களின் இளவரசனா மகுடம் சூடினானா? பிரின்ஸ் - திரைவிமர்சனம் (?/5) 2

இந்நிலையில் காதலியை கூட்டிக்கொண்டு அப்பா சத்யராஜிடம் சென்று அறிமுகப்படுத்துகிறார்,ஆரம்பத்தில் ஓகே என்று சொல்லிய சத்யராஜ் பிறகு பெண் பிரிட்டிஷ் நாட்டினை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்டு கல்யாணத்திற்கு மறுக்கிறார்,காரணம் சுதந்திரப்போராட்டத்தில் பிரிடிஷ் காரர்கள் சத்யராஜ் தாத்தாவை கொன்றதால் அவர்கள் மேல் கடும் கோபத்தில் உள்ளார்.அதே சமயம் கதாநாயகி அப்பாவும் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.இறுதியாக சத்யராஜையும்,கதாநாயகி அப்பாவையும் சிவகார்த்திகேயன் சமாதான படுத்தினாரா?காதலித்த பெண்ணை கரம் பிடித்தாரா என்பதே மீதி படத்தின் கதை ஆகும்

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அந்நியன் பட கதாநாயகி சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

மக்களின் இளவரசனா மகுடம் சூடினானா? பிரின்ஸ் - திரைவிமர்சனம் (?/5) 3

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

நடிப்பு,நடனம்,காதல் மற்றும் காமெடி என ஒரு கதாநாயகனக்கு என்ன உழைப்பு தேவையோ அதை விட அதிகம் இப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது உழைப்பை கொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பு நிச்சயம் பாராட்டக்கூடியது.கதாநாயகி மரியா முதல் படத்திலேயே அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துவிட்டு இளைஞர்களின் இதயங்களில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார்.அனுபவ நடிப்பினை திரையில் காண்பித்து அனைவரையும் ஓவர்டேக் செய்துள்ளார் சத்யராஜ்.சிவகார்த்திகேயன் நண்பர்களாக படத்தில் வரும் சதிஷ்,ராகுல்,பாரத் தங்களது பங்களிப்பினை சிறப்பாக செய்துள்ளனர்.வழக்கம் போல் இல்லாமல் நடிப்பில் பிரேம்ஜி அசத்தி எடுத்துள்ளார்.முதல் தமிழ் படம் என்பது போல் இல்லாமல் அனுபவங்களுடன் படம் எடுத்துள்ளார் இயக்குனர் அனுதீப்.இருநாட்டு போரினால் ஏற்படும் பாதிப்புகளை சரியாக விளக்கி இருக்கிறது படக்குழு.சில இடங்களில் நகைச்சுவை எடுபடவில்லை இது பெரும் குறையாக படத்திற்கு அமைந்துள்ளது.படம் பின்னடைவிற்கு இது முக்கிய காரணம் ஆகும்.பின்னணி இசை மற்றும் பாடலில் தமன் பட்டையைக்கிளப்பியுள்ளார்.ஒளிப்பதிவு எடிட்டிங் படத்திற்கு பக்காவாக பொருந்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் திருமண விளையாட்டை விளையாடி மகிழ்ந்த YOUTUBER இர்பான் புகைப்படங்கள் இதோ

PRINCE படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment