The Indian Times

பொள்ளாச்சியில் இருந்து அண்ணாச்சி PRIYANKA-வுக்கு எழுதிய கடிதம்… VERE LEVEL FUN சூப்பர் சிங்கர்

மக்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை உலகிற்கு அறிமுகபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது விஜய் டிவி.அதன்படி கழக போவது யாரு,சூப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் 1 என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி திறமை உள்ளவர்களை அதில் தேர்ந்தெடுத்து பங்கேற்க வைத்து மிக பெரிய அளவில் அவர்களை கொண்டு செல்கிறது.விஜய் டிவியில் இருந்து பெரிய இடத்திற்கு சென்றவர்கள் பலர்,அவர்கள் தற்போது வெள்ளித்திரையவே கலக்கி வருகின்றனர்.அந்த அளவிற்கு விஜய் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது என்று கூறினால் மிகையாகாது.ஒருமுறை விஜய் டிவியில் வந்துவிடமாட்டோமா என ஏங்குபவர்கள் பலர் அந்தளவிற்கு இன்று உயரம் தொட்டுள்ளது விஜய் டிவி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை சேர்த்துள்ளார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தான் தொகுத்து வந்தார், யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடக்காது,அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக ஆக்குவார் இவர்.விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.ஒரே நேரத்தில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா தற்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா உடன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.தற்போது இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சியில் இருந்து அண்ணாச்சி என்பவர் ப்ரியங்காவிற்கு கடிதம் எழுதியுள்ளார்,அதில் அவரை வர்ணித்து அவருக்கு இளநீரை பரிசாக அனுப்பியுள்ளார்.இது காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தன்னிடம் உள்ள நிலத்தில் முக்கால்வாசியை அவருக்கு எழுதி வைப்பதாகவும்,மீதமுள்ளவைகளை அவரது மனைவி மற்றும் மச்சினிச்சிக்கு எழுதி கொடுப்பதாக எழுதியுள்ளது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

https://youtu.be/mSDFeJN0cRE

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in