The Indian Times

ரேஷ்மா விலகல்… இனி ராதிகாவாக வனிதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும்.

Advertisement

ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.

இப்படி நாளுக்கு நாள் விறுவிறுப்பு எகிறி கொண்டே பாக்கியலட்சுமி தொடர் சென்று வருகிறது.இப்படி இருக்க இன்னொரு பக்கம் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா விலகி உள்ளதாகவும்,அவருக்கு பதிலாக இனி வனிதா நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியது,இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியதாவது, ரேஷ்மா விலகவில்லை அவர்தான் ராதிகா என கூறியுள்ளது.மேலும்  வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.இதனால் தற்போது பாக்கியலட்சுமி ரசிகர்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in