பகையை வென்றார்களா சோழர்கள் – பொன்னியின் செல்வன் 2 – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.இவரின் நீண்ட நாள் கனவு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க வேண்டும் என்பதே,அதற்கான சரியான நேரம் காத்திருந்து கதையின் உரிமையை வாங்கினார்.பின்னர் படத்தினை எடுக்க துவங்கி விட்டார்.இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி,கார்த்தி,விக்ரம்,பிரபு,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்குள் மத்தியில் உருவாகிய இப்படத்தின் முதல் பாகம் ஆனது கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி வரை வசூல் பெற்றது.தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகியுள்ளது.

பகையை வென்றார்களா சோழர்கள் - பொன்னியின் செல்வன் 2 - திரை விமர்சனம் 1

விளம்பரம்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கதைக்களம்

சோழ தேசத்து அரசர் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள் அதில் முதல் பிள்ளை ஆதித்த கரிகாலன்,இரண்டாவது மகள் குந்தவை மூன்றாவது கடைக்குட்டி அருண்மொழி வர்மன்.இதில் மூத்த பிள்ளை ஆதித்த கரிகாலன் தனது நண்பர்களான வல்லவரையன் வந்தியதேனுடன் இணைந்து ராஷ்ட்டிகூடர்களுக்கு எதிராக போர் புரிந்து வெற்றிகொள்கிறார்.அதே சமயம் சோழ நாட்டினை அளிக்க சதி நடப்பதை ஆதித்த கரிகாலன் தெரிந்துகொள்ள,உடனே வந்திய தேவனை தஞ்சைக்கு ஒற்றனாக அனுப்பி அங்கு நடப்பதினை தந்தைக்கும் தங்கைக்கும் எடுத்துக்கூற ஆணையிடுகிறார்.தஞ்சை செல்லும் வந்திய தேவன் அங்கு கடம்பூர் சம்புவராயர் மாளிகையை அடைகிறார்.அங்கு சுந்தர சோழருக்கு பின் மதுராந்தகன் அரசன் ஆக வேண்டும் என பெரிய பழுவேட்டயர் உடன் சிற்றரசர்கள் சதி திட்டம் தீட்டுவதை கண்டறிகிறார்.இதனை தெரிந்துகொண்டு வந்திய தேவன் அங்கிருந்து கிளம்பி பயணத்தினை தொடங்க வரும் வழியில் நந்தினியை காண்கிறார்.பின்னர் சுந்தர சோழரை சந்திக்கும் வந்திய தேவன் நடக்கும் சதி திட்டங்கள் குறித்து மன்னரிடம் கூறுகிறார்.பின்னர் குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன் காதலில் விழுகிறார்,

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா நாகேஷின் கியூட்டான அழகிய போட்டோஷூட்

பகையை வென்றார்களா சோழர்கள் - பொன்னியின் செல்வன் 2 - திரை விமர்சனம் 2

குந்தவையும் வந்திய தேவன் மீது காதல் வயப்படுகிறார்.இந்நிலையில் இலங்கையில் இருக்கும் தனது தம்பி அருண் மொழி வர்மனை அழைத்து வர குந்தவை வந்தியத்தேவனுக்கு கட்டளையிடுகிறார்.காதலி கட்டளையை ஏற்று பூங்குழலி படகில் இலங்கை சென்றடைகிறார் வந்தியத்தேவன் ,அருண்மொழியை சந்தித்து அனைத்தையும் கூறுகிறார்.அதே சமயம் பாண்டியனின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள் மொழி வர்மனையும், சோழ நாட்டின் அரசர் சுந்தரச்சோழரையும் கொலை செய்வதற்கு சபதம் எடுத்துக்கொள்கின்றனர்.இந்நிலையில் கப்பலில் நடக்கும் பாண்டியர்களுக்கும் ,அருண்மொழி வர்மன் மற்றும் வந்தியத்தேவன் அந்த சண்டையில் ஜெயித்து விடுகின்றனர்.ஆனால் அதே சமயம் அவர்கள் தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகிறது.இத்துடன் முதல் பாகம் முடிகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

பகையை வென்றார்களா சோழர்கள் - பொன்னியின் செல்வன் 2 - திரை விமர்சனம் 3

பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் கதைக்களம்

விளம்பரம்

நீருக்குள் விழுந்த அருண்மொழி மற்றும் வந்திய தேவனை ஊமை ராணி காப்பாற்றிவிடுகிறார்.இந்த செய்தி ஆபத்துதவிகளுக்கும் நந்தினிக்கு தெரிய வருகிறது.அதே சமயம் சோழ நாடு தன்னுடையது என கூறி மதுராந்தகன் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.இந்நிலையில் நந்தினி தனது பகையை முடிக்க சுந்தர சோழர்,ஆதித்த கரிகாலன்,அருண்மொழி என மூவரையும் தனித்தனியாக கொல்ல முடியாது ஒரே நாளில் கொன்றுவிட முடிவு செய்கிறார்.அதற்காக ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு வரவழைக்கிறார் நந்தினி.இந்நிலையில் தம்பி தங்கை என அனைவரும் தடுத்தும் கடம்பூர் மாளிகைக்கு செல்கிறார் ஆதித்த கரிகாலன்.அங்கு அவரை நந்தினி கொலை செய்தாரா?அடுத்த மன்னனாக பட்டம் சூடியது யார் என்பதே மீதி படத்தின் கதை

பகையை வென்றார்களா சோழர்கள் - பொன்னியின் செல்வன் 2 - திரை விமர்சனம் 4

படத்தின் விமர்சனம்

ஆதித்த கரிகாலனாக வந்த விக்ரம் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார்,ஆதித்த கரிகாலனை நமது கண் முன் நிறுத்தியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.காதலிக்காக ஏக்கம்,ராஜ்யத்தையே காதலிக்காக விட்டுக்கொடுப்பது என தத்ரூபமாக நடித்துள்ளார் விக்ரம்.முதல் பாகத்தினை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் ஐஸ்வர்யா ராய் கலக்கி உள்ளார் என்று தான் கூறவேண்டும்.குந்தவையாக த்ரிஷா படத்தில் நியாயம் செய்துள்ளார்,வந்தியத்தேவன் கார்த்தி நடிப்பு படத்தினை தூக்கி நிறுத்தியுள்ளது என்றே கூறலாம்.பார்த்திபேந்திர பல்லவனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவிற்கு இப்படத்தில் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து அசத்திவிட்டார் மணிரத்தினம் என்று தான் சொல்ல வேண்டும்.கல்கி கதையில் சில மாற்றத்தினை மணிரத்தினம் கையாண்டுள்ளது புத்தகம் படித்தவர்களுக்கு சில வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதையை வேகமாக நகர்த்தியிருந்தால் இன்னும் படம் ஆரம்பத்திலேயே சூடுபிடிக்க தொடங்கியிருக்கும்.ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சிறந்த ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்,அதே போல் இசைப்புயல் ரஹ்மானின் இசை படத்தினை அடுத்த கட்டத்திற்கே கொண்டு சென்றுள்ளது,அதுவும் அந்த அகநக பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் திரையரங்கில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் – 3.5/5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment