The Indian Times

திருநெல்வேலியில் புகழ் திறந்து வைத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ஸூக்கு வித் கோமாளி புகழுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இன்ஸ்டாகிராமில் அவர் புகழை எடுத்துரைக்கும் followers ஏராளம். இந்நிலையில் இன்று குக்கு வித் கோமாளி புகழ் திருநெல்வேலியில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் சென்றது அவருடைய ஏராளமான ரசிகர்கள் கடையின் வாசலில் கூட்டம் கூடினர்.

சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வரும் நிலை இருக்கிறது. இந்த மாதிரியான சமயத்தில் திருநெல்வேலியில் அந்த கடைக்கு புகழை பார்க்க அவரது ரசிகர்கள் அதிகளவில் கூட்டம் கூடினர். இதனால் தற்போது அந்த கடைக்கு சீல் வைத்து விட்டது அரசாங்கம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in