என் அறக்கட்டளைக்கு இனி நன்கொடை கொடுக்க வேண்டாம்.! திடீரென அறிவித்த ராகவா லாரன்ஸ்

விளம்பரம்
விளம்பரம்

இனிமேல் தன் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என்று ராகவா லாரன்ஸ் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் அறக்கட்டளை வைத்து பலருக்கும் உதவி புரிந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக இருந்த இவர் பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் பல மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு நடன பயிற்சி அளித்து ஊக்குவித்து வருகிறார். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கும் தனது அறக்கட்டளை மூலமாக உதவி புரிந்து வருகிறார். பல குழந்தைகளின் இதயமாற்று அறுவை சிகிச்சையை தன் அறக்கட்டளை மூலம் நடத்திக் காட்டி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் தனது உடலை மெருகேற்றி இருக்கிறார். இந்த நிலையில் அறக்கட்டளை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடனமாடி கவிஞர் சினேகனை மயக்கிய மனைவி கன்னிகா...அடடே கவிஞருக்கு வெட்கத்தை பாருங்க

என் அறக்கட்டளைக்கு இனி நன்கொடை கொடுக்க வேண்டாம்.! திடீரென அறிவித்த ராகவா லாரன்ஸ் 1

விளம்பரம்

அவர் பகிர்ந்துள்ள செய்தியில் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சந்திரமுகி 2 படத்திற்காக என் உடலை மாற்றி வருகிறேன். இந்த சிறிய முயற்சியை முதலாவதாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார். இரண்டாவதாக இத்தனை ஆண்டுகளாக என்னுடைய அறக்கட்டளைக்கு உதவி புரிந்து வந்த நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள், அதனால் என்னால் இயன்றதை செய்துள்ளேன்.

கட்டாயம் படிக்கவும்  உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர்

என் அறக்கட்டளைக்கு இனி நன்கொடை கொடுக்க வேண்டாம்.! திடீரென அறிவித்த ராகவா லாரன்ஸ் 2

விளம்பரம்

தேவைப்படும்பொழுதெல்லாம் நீங்கள் எனக்கு உதவியை செய்து இருக்கிறீர்கள். நானும் உங்களிடமிருந்து உதவியை பெற்றுள்ளேன். இப்பொழுது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். இனி மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்து இருக்கிறேன். எனவே எனது அறக்கட்டளைக்கு உங்களுடைய நன்கொடை பணத்தை வழங்க வேண்டாம் என்று கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும், இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன். எனது ஆதரவாளர்களுக்கு மிகவும் நன்றி. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை விரைவில் ஏற்பாடு செய்வேன். அனைவருக்கும் இதே பூர்வமான நன்றிகள் என்று தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென காலில் விழுந்த ஐஸ்வர்யா ராயினால் பதறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

என் அறக்கட்டளைக்கு இனி நன்கொடை கொடுக்க வேண்டாம்.! திடீரென அறிவித்த ராகவா லாரன்ஸ் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment