The Indian Times

சோம் பற்றி பேசிய ரம்யா பாண்டியன் – வெளியான வீடியோ

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 ன் ஃபைனல் தொடர்ந்து இப்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 17 தேதி முடிந்த இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதை எல்லாத்தையுமே மறந்து விட்டு அந்த வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

Advertisement

இந்த நிலையில் இந்த பேட்டியின் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் என்று அவர் பெற்ற அதீத வாக்குகள் அடிப்படையில் அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இரண்டாம் இடம் பாலா, மூன்றும் இடம் ரியோ மற்றும் ரன்னர் முறையில் ரம்யா பாண்டியன் அறிவிக்கப்பட்டார். ரம்யா பாண்டியன் அவரது சிரிப்பால் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றுவிட்டார். மேலும் அவருக்கு இப்போது பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

மேலும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் பேட்டி கொடுக்கும் போது அவருக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள அனைவரிடத்திலும் உள்ள நல்ல உறவை பற்றி பேசி இருந்தார். அதில் அர்ச்சனா, ஷிவானி, அனிதா ஆகியோர் இடையே இருந்த நல்ல நட்புறவை பற்றியும் கூறி இருந்தார். குறிப்பாக சோம் இடையே இருந்த பாண்டிங் பற்றியும் கூறி இருக்கிறார். சோம் எனக்கு ஒரு நல்ல நண்பர் என்று குறிப்பிட்டார். தமிழ் நாட்டில் பல உள்ளங்கள் கவர்ந்த இவருக்கு சூர்யா தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Video Credits: Behindwoods Tv Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in