The Indian Times

நீங்க பேசுங்க..நான் குடை பிடிக்கேன்…Sai pallavi-க்கு குடை பிடித்த Rana daggubati

பாகுபலியில் வில்லனாக நடித்து அனைவரையும் அலறவிட்டவர் ராணா.இவரை விட அந்த கதாபாத்திரத்திற்கு வேறு எவரும் பொருந்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு திறமையை காண்பித்து அசத்தி விட்டார்.இந்த படத்தின் மூலம் தான் இவர் பலராலும் அறியபட்டவர் ஆகினார்.2010 ஆம் ஆண்டு வெளியாகிய லீடர் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து தெலுங்கு சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.அதேபோல் தம் மாரோ தம் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் நடிகராக அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் ஆரம்பம்.இப்படத்தில் அஜித்துக்கு நண்பராக நடித்திருப்பார்.இப்படி தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.இவருக்கென தெலுங்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அண்மையில் இவர் பவன் கல்யாண் உடன் நடித்த பீம்லா நாயக் திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி ராணா நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சாய் பல்லவி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு மழை பெய்ய தொடங்கியுள்ளது.அப்போது அருகில் இருந்த ராணா ,தான் பெரிய நடிகர் என்ற சிறு எண்ணம் கூட இல்லாமல் உடனே அங்கிருந்த குடையை எடுத்து சாய் பல்லவி மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ராணாவின் நல்ல மனதினை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in