தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிக்கா மந்தானா.இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தெலுங்கு நடிகையான நடிகையான ராஷ்மிக்கா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் தெலுங்கு ரசிகர்களை மட்டும் ஈர்க்காமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார்.இப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ் ,கன்னடம் என பல மொழி சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.இந்த படவாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி கதாநாயகியாக மாறினார் ராஷ்மிக்கா.
தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த இவருக்கு ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது. சரி வந்த வாய்ப்பினை தவறவிட வேண்டாம் என கூறி இவர் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மீண்டும் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தினை செலுத்த தொடங்கினார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.இப்படத்தின் மூலம் உலகளவு ரசிகர்களை சம்பாதித்தார் ராஷ்மிக்கா
இந்நிலையில் நடிகை ராஷ்மிக்கா முகம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள ராஷ்மிக்கா தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது,இணையத்தில் பரவி வரும் ஏஐ தொழில்நுட்ப வீடியோவை குறித்து பேசுவது வருத்தமாக உள்ளது.தொழில்நுட்பம் இப்படி தவறாக பயன்படுவதை பார்த்தால் மிகவும் பயமாக உள்ளது.இது என்னுடைய பள்ளி கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் என்ன செய்ய முடியும் எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in