The Indian Times

மக்களின் ஸ்டார் ரட்சிதா… வீட்டிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த ரசிகர்கள் மற்றும் உறவினர்கள்.. நெகிழ்ந்து போன ரட்சிதா

நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திவிடுவோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தார் .பல நாடகங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்தின் மூலம் இவர் தமிழக மக்களின் அனைவரது வீட்டிலும் சென்றடைந்து மிக பிரபலமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் வாய்ப்பு கிடைத்தது.யோசிக்காமல் உடனே கலந்துகொண்டார்,மேலும் பிற போட்டியாளர்களுடன் தன்னால் முயன்ற அளவுக்கு போட்டியிட்டு அசத்தினார்.தனது விளையாட்டின் மூலம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.கடந்த வாரம் எதிர்பார்க்காத விதமாக குறைவான வாக்குகளை பெற்று 13வது போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேறினார்.இந்நிலையில் பிக் பாஸ் முடித்து வீட்டிற்கு வந்த அவருக்கு பட்டாசு வெடித்து,மாலை அணிவித்து உறவினர்களும் ரசிகர்களும் அவரை பிரம்மாண்டமாக வரவேற்றுள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரட்சிதா மஹாலக்ஷ்மி

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in