The Indian Times

என்ன நயன்-விக்கிலாம்.. இன்ஸ்டா TRENDING-கே நம்ம தான் மகாலட்சுமி

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர்.

Advertisement

மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.அந்தளவிற்கு இருவரும் வைரல் ஜோடிகளாக ஆகி விட்டனர்.தற்போது ரவீந்தர் மனைவி மஹாலட்சுமி உடன் இணைந்து வெளியே சுற்றி வருகிறார்.அப்பொழுது எடுக்கப்பட்ட ரொமேன்டிக் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in