The Indian Times

காதலுடன் மனைவி மகாலட்சுமிக்காக ஷூட்டிங்கிற்கு உணவு எடுத்து சென்ற ரவீந்தர்……

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

Advertisement

தற்போது நடிகை மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தற்போது இன்று மகாலஷ்மி சீரியல் படப்பிடிப்பிற்காக சென்றுவிட்டார்.ஆனால் இன்று புரட்டாசி 1 என்பதால் மனைவிக்கு சாப்பாடை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு சென்று உணவு கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தினை ரவீந்தர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .மேலும் பாத்திரத்தினை பத்திரமாக வீட்டிற்கு எடுத்து வரவும் என கூறியுள்ளார்.ரவீந்தருக்கு மனைவி மேல் இருக்கும் காதலை கண்டு ரசிகர்கள் இதுபோல எப்பொழுதும் ஒற்றுமையாக இருங்கள் என கூறி வாழ்த்தி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in