விக்னேஷ் சிவனுக்கு திரும்பவும் கல்யாணம் நடக்கும்…விக்னேஷ் பெரியப்பா அதிர்ச்சி தகவல்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இப்படி நட்சத்திர ஜோடிகளாக வலம் இவர்கள் எப்பொழுது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எண்ணம் இவரது ரசிகர்களிடம் அதிகம் காணப்பட்டது

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்

விக்னேஷ் சிவனுக்கு திரும்பவும் கல்யாணம் நடக்கும்...விக்னேஷ் பெரியப்பா அதிர்ச்சி தகவல் 1

விளம்பரம்

இருவரும் அடிக்கடி கோவில் மற்றும் சுற்றுலா சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.எப்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொள்ளுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.ஜூன் 9 ஆம் தேதி இன்று இருவருக்கும் திருமணம் என இரண்டு நாட்களுக்கு முன்னதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னையில் நேற்று மகாபலிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அடுத்த நாளே நேற்று திருப்பதியில் கணவன் மனைவி சாமி தரிசனம் செய்தனர்.

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

விக்னேஷ் சிவனுக்கு திரும்பவும் கல்யாணம் நடக்கும்...விக்னேஷ் பெரியப்பா அதிர்ச்சி தகவல் 2

விளம்பரம்

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது கல்யாணத்திற்கு உறவினர்கள் யாரையும் கூப்பிடவில்லை என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது.இந்த தகவல் நேற்று தீ போல் பரவி பெரிதும் பேசப்பட்டது.இந்நிலையில் திருச்சி லால்குடியை சேர்ந்த விக்னேஷ் சிவனின் பெரியப்பா இதுகுறித்து கூறியதாவது,விக்னேஷ் சிவன் என் தம்பி பையன் தான்,எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் விக்னேஷ் மற்றும் அவரது தங்கை ஐஸ்வர்யாவையும் எங்களது சொந்த பிள்ளைகள் போல வளர்த்தோம்.சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் எனது வீட்டில் தான் இருப்பார்.அவரது அப்பா இறந்தபிறகு சென்னை சென்ற அவர்கள் யாரையும் தொடர்புகொள்ளவில்லை,பிள்ளைபோல் வளர்த்த எங்களிடமும் ஆலோசனை கேட்காமல் திருமணம் செய்துகொண்டது சற்று வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார் மேலும் அவரது திருமணம் ஆனது காலை 9 மணியில் இருந்து 10:30 மணிக்குள் நடைபெற்றுள்ளது.இது குளிகை நேரம் ஆகும் இந்த நேரத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் அது திரும்ப திரும்ப நடக்கும் எனபது ஐதீகம் எனவும் அவர் தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் இந்த செய்தி ரசிகர்களிடம் தீ போல் பரவி வருகிறது.ரசிகர்கள் அனைவரும் இதற்கு மறுப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

விக்னேஷ் சிவனுக்கு திரும்பவும் கல்யாணம் நடக்கும்...விக்னேஷ் பெரியப்பா அதிர்ச்சி தகவல் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment