The Indian Times

வளர்த்துவிட்ட மகன் இருந்தும் ஆதரவற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் SA சந்திரசேகர்

பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை 80,90 களில் வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார் இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.

Advertisement

ஆண் குழந்தையை மட்டும் சினிமாவில் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.தற்போது விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாலும் அதனால் மனஸ்தாபம் இருப்பதாகவும் செய்திகள் அண்மையில் வெளிவந்தது.இந்நிலையில் SA சந்திரசேகர் தனது பிறந்தநாளை யாரும் இல்லாதது போல் தனியாக அவரது மனைவியுடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜயை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.அப்பா அம்மாவை இப்படி தனியாகவே விடுவது,என்னதான் பிரச்சனை இருந்தாலும் அதுக்காக அப்பா பிறந்தநாள் விழாவில் கூட கலந்துகொள்ள முடியாதா,படத்தில் மட்டும் அம்மா அப்பாவ வணங்கி பாரு எல்லாருக்கும் எல்லாம் வரும்னு பாடினால் மட்டும் போதாது அதுபோல் நடந்து காட்ட வேண்டும் என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.உண்மையில் இந்த புகைப்படத்தினை பார்க்கும் பொழுது கஷ்டமாக தான் இருக்கிறது.சிறுவயதிலேயே மகளை பறிகொடுத்து,மகனை வளர்த்து இன்று சூப்பர் ஸ்டார் ஆக்கி அவரும் பெற்றோர்கள் உடன் இல்லாமல் தனியாக இரண்டு பெரியவர்களும் இருப்பது கொடுமைதான்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in