The Indian Times

கேக்கை தூக்கி கொண்டு ஓடிய சாய் பல்லவி… குறும்புத்தனம் அதிகம் போலயே சாய் பல்லவிகிட்ட

தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதல்முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.இப்படி சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி தற்பொழுது தமிழ்,மலையாளம்,தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக கலக்கு கலக்கி வருகிறார்

Advertisement

இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ரம்யா இரண்டு தட்டுகளை சாய் பல்லவியிடம் கொடுத்து அதில் கேக் துண்டுகளை இருவருக்கும் வைத்துள்ளார்.இந்நிலையில் இரண்டையும் எடுத்துக்கொண்டு ஓட சாய் பல்லவி முயற்சி செய்துள்ளார்.இந்த குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இந்த வீடியோவில் சாய் பல்லவி குழந்தை குறும்புத்தனத்தினை ரசித்து வீடியோவை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in