The Indian Times

டேய் பொண்ண பார்த்து ஓவரா வழியாத..திருமணத்தில் மாப்பிளையை கலாய்க்கும் நடிகை சாய் பல்லவி

மருத்துவர் ஆன சாய் பல்லவி நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடினார்.ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.சிறு காதாபாத்திரத்தில் சினிமாவில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.இன்று தெலுங்கு சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் சாய் பல்லவி .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் என்ற மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை சாய் பல்லவி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவது இவரது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக தான் அமைந்துள்ளது.

Advertisement

படத்தில் சீரியசாகவும்,ஜாலியாகவும் கதைக்கு ஏற்ற மாதிரி வலம் வரும் சாய் பல்லவி நிஜத்தில் பயங்கர குறும்பும் சேட்டையும் செய்ய கூடியவர்.இவர் கலந்துகொண்ட திருமண விழாவில் இவர் செய்த குறும்புகள் வீடியோ அண்மையில் வெளியாகி தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது. இதில் கல்யாண மாப்பிளையை கலாய்த்தும்,திருமணத்தில் ஆட்டம் போட்டும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ சாய் பல்லவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.என்ன அழகா சேட்டை செய்யுறாங்க என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வீடியோவை வெகுவாக இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Embed video credits: That moment photography

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in