The Indian Times

தீவிர பக்தையாக மாறி தஞ்சை பெரிய கோவிலில் தரிசனம் செய்த சாய் பல்லவி

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார்.

Advertisement

இவர் நேற்று தஞ்சை பெரியகோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.அங்கு வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.இவரை கண்ட ரசிகர்கள் இவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.இந்த வீடியோ மற்றும் புகைப்படம் பெருமளவில் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சேலையில் மிக அழகாக சாய் பல்லவி இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

https://www.youtube.com/shorts/0kg-De7t4vU

Embed video credits: BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in