The Indian Times

வெளியாகியது நடிகை சமந்தாவின் 16வயது புகைப்படம்…

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.

Advertisement

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

Advertisement

தற்போது நடிகை சமந்தா மும்முரமாக தனது அடுத்தப்பட வேலைகளை பார்த்து கொண்டு வருகிறார்.கடந்த வாரம் இவரது நடிப்பில் வெளியாகிய சாகுந்தலம் படம் இவருக்கு சரியான வரவேற்பினை பெறவில்லை,தோல்விப்படமாக இப்படம் அமைந்துள்ளதால் சமந்தா அடுத்த படத்தில் களம் இறங்கிவிட்டார்.இந்நிலையில் நடிகை சமந்தா அவரது 16வயதில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in