The Indian Times

நடிகை சமந்தா உடல்நிலையில் பின்னடைவு… அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சையில் சமந்தா

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார்.இப்படம்
அண்மையில் தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இவர் Myositis என்னும் Autoimmune எனும் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தற்போது அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவரை உடனடியாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் சமந்தா மீண்டு வர தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Thanthi Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in