The Indian Times

இயக்குனர் பேசியதை கேட்டு மேடையிலேயே கதறி அழுத நடிகை சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

Advertisement

தற்போது இவருக்கு அடுத்ததாக இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சகுந்தலம் படம் வெளியாக இருக்கிறது.இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது,விழாவில் பேசிய இயக்குனர் குணசேகர் இப்படத்தின் உண்மையான கதாநாகயன் என்றால் அது சமந்தாதான் என கூற அதனை கேட்ட சமந்தா கதறி அழுதுள்ளார்.இந்த வீடியோவில் சமந்தா அழுதது ரசிகர்களிடம் பெரும் கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது

Embed video credits : TV9 ENTERTAINMENT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in