இந்து அறநிலைய துறை அமைச்சர் தான் திரு.சேகர் பாபு அவர்கள்! திமுகவில் முக்கிய பங்கு வகிக்கும் நபர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தமிழ்நாட்டின் முதல்வராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார் என்பது வரலாறு அறிந்த செய்தியே! ஒவ்வொரு சிறப்பு கொண்ட ஆளுக்கும் அந்தந்த துறையில் அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்!
அவ்வாறு இருக்கையில் சேகர் பாபு அவர்கள் இந்து அறநிலைய துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் சிறப்பாக ஆட்சி செய்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும்! சமீபத்தில் கூட நரிக்குறவ மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் அவர்களுக்கு அன்னதானம் வழங்காமல் ஒதுக்கிய கோவில் நிர்வாகத்தின் முன்பே சென்று அவர்களை கோவிலுக்குள் அழைத்து தன்னருகே அமர வைத்து அழகு பார்த்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்! அந்த செய்தியும் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல வேகமாக பரவியது! அதேபோல வெள்ளக்காடாக மாறிய தமிழநாட்டின் தலைநகரமான சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு வந்துள்ளார்!
அப்பொழுது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூர் தொகுதியை பார்வையிட சென்ற வழியில் “பாரத் மாதா கீ ஜே” என பாஜகவினர் சிலர் கோஷம் எழுப்பிய நிலையில், காரிலிருந்து இறங்கி அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பயத்தில் பம்மி மனு கொடுக்க வந்ததாக அந்தர் பல்டி அடித்து அமைதியாக சென்றுவிட்டதாக கூறுகின்றனர்! இன்னலையில் அந்த வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்! அந்த வீடியோவை நீங்களும் காணுங்கள்! Watch The Video Below!…
Sekar Babu : Enna da
That Group: Onnum Illa na summa manu kuduka vandhom
😂😂😂pic.twitter.com/39dcnZJi79— Raj ✨ (@thisisRaj_) November 9, 2021
இதன் முழு வீடியோவை தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை IAS அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்! அதையும் காணுங்கள்! Watch The Video Below!…
கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த @BJP4TamilNadu தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்!
நீங்களும் செய்ய மாட்டீர்கள் செய்பவர்களையும் விட மாட்டீர்கள்.
இதுதான் @arivalayam கட்சியினுடைய அழகு! pic.twitter.com/RnCvOaYwiP
— K.Annamalai (@annamalai_k) November 9, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in