The Indian Times

நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கு? இரண்டாவது மனைவியையும் பிரிகிறாரா…செல்வராகவன் TWITTER பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.இவர் இயக்கும் திரைப்படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவரது ஆயிரத்தில் ஒருவன் படம் மற்றும் புதுப்பேட்டை படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இவர் முதன் முதலில் இயக்கிய படம் காதல் கொண்டேன்.தனுஷ் நடிப்பில் உருவாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் நானே வருவேன் என இரண்டு படங்களை நடிகர் தனுஷ் வைத்து இயக்கி வருகிறார்.

Advertisement

இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது நடிகராகவும் களம் இறங்கி இருக்கிறார் செல்வராகவன்.பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.இப்படத்தில் நடிகர் செல்வராகவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அதனை தொடர்ந்து சாணிக்காயிதம் படத்தில் நடிப்பில் பிரித்தெடுத்திருந்தார்.மேலும் இயக்குனர் மோகன் இயக்கத்தில் தற்போது பகாசுரன் படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது

Advertisement

இவர் முதலில் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துகொண்டனர்.அதன்பின்னர் கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.இருவரும் தற்போது மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகின்றனர்,இந்நிலையில் செல்வராகவன் தற்போது வெளியிட்ட பதிவால் பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.அந்த பதிவில் தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.என வாழ்க்கை துணையை பற்றி கூறியுள்ளார்.இதனால் இரண்டாவது மனைவியையும் விட்டு பிரிய போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in