The Indian Times

முதல் சீன்லையே நல்ல படத்துக்கு வந்துருக்கோம்னு நம்பிக்கை வந்துட்டு… செம்பி BLUESATTAI MARAN REVIEW

1999 ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தினை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகியவர் பிரபு சாலமன்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.ஆனால் எந்த படமும் தராத வெற்றியை 2010ஆம் ஆண்டு வெளியாகிய மைனா படம் கொடுத்தது.இப்படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் பிரபு சாலமன் என்று தான் கூறவேண்டும் ,இப்படத்தின் வெற்றிக்கு பிறகு காடுகள், மலைகள் பேருந்து போன்றவைகளை தனது படத்தில் முக்கிய ஒன்றாக வைத்துக்கொள்ள தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து கும்கி படத்தினை இயக்கினார்.இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய எந்த படமும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை,கும்கியை போல இவர் யானைகளை வைத்து இயக்கிய காடன் பெரும் தோல்வி படமாக அமைந்தது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.தற்போது மீண்டும் நல்ல படத்தினை கொடுக்க வேண்டும் என முயற்சி செய்து வந்த பிரபு சாலமன் செம்பி கதையை உருவாக்கினார்.

Advertisement

இப்படத்தில் கோவை சரளா,குக் வித் கோமாளி அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இதில் அவர் கூறியதாவது,படம் ஆரம்பித்த முதல் சீன்லையே நல்ல படத்திற்கு வந்திருக்கோம் என்று தோன்றியது,முதல் பாதி ரொம்ப சூப்பராக இருந்தது.ஆனால் இரண்டாம் பாதி அப்படியே எதிர்மறையாக உள்ளது,மிகவும் நாடகத்தன்மையாக உள்ளது.இது நல்ல வரவேண்டிய படத்தினை கெடுத்துள்ளது.படத்தில் காட்சிகள் முன்கூட்டியே கணிப்பதாக உள்ளது.முதல் பாதியை போல இரண்டாவது பாதியும் இருந்திருந்தால் இப்படம் நன்றாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in