ரசிகர்களை கவர்ந்ததா செம்பி – முழு திரைவிமர்சனம் (?/5)

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் செம்பு.இப்படத்தில் அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் தம்பி ராமையா,நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தில் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது,மைனா,கும்கிக்கு பிறகு வெற்றியை தராத இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் வெற்றியடைந்தாரா?என்பதை கீழே விமர்சனத்தில் காணலாம்.

ரசிகர்களை கவர்ந்ததா செம்பி - முழு திரைவிமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை :

பழங்குடியின மக்களில் ஒருவர் கோவை சரளா,இவர் தனது பேத்தியை வளர்த்து வருகிறார்.இவர் பத்து வயது பேத்தியின் பெயர்தான் செம்பி.இவர்கள் கொடைக்கானலில் உள்ள புலியூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.காட்டில் கிடைக்கும் தேன் பொருட்களை எடுத்து அதனை விற்பனை செய்து அதில் வரும் காசை வைத்து வாழ்க்கையை ஒட்டி வருகிறார் கோவை சரளா.இந்நிலையில் கோவை சரளா தேன் எடுத்து பேத்தியிடம் கொடுத்து விற்பனை செய்ய சந்தைக்கு அனுப்புகிறார்,அவர் செல்லும் வழியில் அவரை மூன்று பேர் பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர்.பின்னர் பேத்தி காட்டில் அடிபட்டு கிடப்பதாக கோவை சரளாவுக்கு தகவல் வர விரைந்து பேத்தியை மீட்டெடுக்கிறார்,பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர் அங்கு செம்பியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது கண்டுபிடிக்கப்படுகிறது.இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கிறார்,ஆனால் போலீஸ் செம்பியை பாலியல் கொடுமை செய்த எதிர்க்கட்சி தலைவரின் மகனும்,அவரது இரண்டு நண்பர்களும் என்பதை தெரிந்துகொண்டே,அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு வழக்கை முடிக்க பார்க்கிறார்.இதற்காக கோவை சரளாவிடம் கையெழுத்து வாங்க வரவே,இதனை தெரிந்து கொண்ட கோவை சரளா என் பேத்திக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூறிக்கொண்டிருக்கும் பொழுது போலீசை தாக்கி அங்கிருந்து தப்பிக்கிறார்.செல்லும் வழியில் அஸ்வின் வரும் பேருந்தில் ஏறுகிறார்.இதன்பின் என்னாகியது,செம்பிக்கு நீதி கிடைத்ததா,இதற்கு அஸ்வின் என்ன உதவினார் என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

ரசிகர்களை கவர்ந்ததா செம்பி - முழு திரைவிமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம் :

விளம்பரம்

எப்பொழுதும் திரையில் நகைச்சுவை செய்து நம்மளை சிரிக்க வைத்த கோவை சரளா முதல் முதலாக தனது நடிப்பின் மூலம் நம்மளை அழ வைத்துள்ளார்.ஒரு மூதாட்டியை போல அப்படியே உடல் பாவனைகளுடன் நடித்திருப்பது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்துகிறது.பேத்தி செம்பிக்கு நீதி கிடைக்க அவர் போராடுவது பார்க்கும் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.செம்பியாக நடித்த நிலா நடிப்பு சூப்பர்.படத்தில் நடித்த அஸ்வின் தனது நடிப்பின் மூலம் பாராட்டுக்களை அதிகம் பெற்றுள்ளார்.பேருந்து நடத்துனராக வரும் தம்பி ராமைய்யா வழக்கம் போல தனது சிறந்த நடிப்பினை காட்டியுள்ளார்.பேருந்தில் வரும் நாஞ்சில் சம்பத்,ஆண்ட்ரூவ் கதாபாத்திரங்கள் ஆகியவை கனகச்சிதமாக பொருந்தி உள்ளது.அதிலும் குறிப்பாக போலீசாக வந்து மிரட்டி இருக்கும் அசோக் நடிப்பு அருமை.பிரபு சாலமன் எடுத்துக்கொண்ட இந்த கதையை சிறப்பாக கையாண்டு சரியாக நகர்த்தி கொண்டு சென்றுள்ளார்,பெண்குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்பதை காட்டியுள்ளார்.கதையில் எந்த தொய்வும் இல்லாமல் நகர்வது படத்திற்கு பலம் அளிக்கின்றது.ஆனால் சில சில லாஜிக் மிஸ்டேக்குகளை சரி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நிவாஸ் பிரசன்னா படத்திற்கு கூடுதல் பலத்தினை சேர்த்துள்ளது மேலும் ஒளிப்பதிவு படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது,இயற்கையை அப்படியே காட்டியுள்ளார் பிரபு சாலமன்.மொத்தத்தில் செம்பி பார்க்க வேண்டிய படம்

கட்டாயம் படிக்கவும்  அடையாளம் தெரியாமல் ஆங்கில நடிகை போல மாறிய VJ பார்வதியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ

செம்பி படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment