கோவை சரளா நடிப்பில் மிரட்டும் செம்பி படத்தின் 2வது ட்ரைலர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் பெண் நகைச்சுவை நடிகைகளில் முன்னணி நடிகை கோவை சரளா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.வடிவேலுவுடன் இவர் அடிக்கும் லூட்டிகளுக்கு இன்று வரை ரசிகர்கள் உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.தனது எதார்த்த நடிப்பு மற்றும் உடல் அசைவுகளால் மக்களை பெரிதும் கவர்ந்திழுத்தவர் இவர். 90களில் இவர் இல்லாத படங்களே இல்லை என்பது போல ஆகிவிட்டது,அந்தளவிற்கு நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர்.ஆச்சி மனோரமாவுக்கு பிறகு சிறந்த நடிகையாக வளம் வருபவர் கோவை சரளா தான்.இன்று வரை இவர் இடத்தினை பிடிக்க எவரும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

கோவை சரளா நடிப்பில் மிரட்டும் செம்பி படத்தின் 2வது ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

கோவை சரளா தற்போது குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து செம்பி எனும் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஸ்வின்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ட்ரிடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

கோவை சரளா நடிப்பில் மிரட்டும் செம்பி படத்தின் 2வது ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

இப்படத்தில் நடிகர் தம்பி ராமைய்யா ,தொகுப்பாளர் ஆண்ட்ருஸ் ,கோவை சரளா நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.வழக்கம் ஆன பிரபு சாலமன் படம் போல இப்படமும் மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.பிரபு சாலமன் படம் என்றாலே அது மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும்படி தான் அமைந்திருக்கும்.அதுபோலத்தான் இப்படமும் அமைந்திருக்கிறது என்பதை ட்ரைலரை பார்க்கும் பொழுது தெரிந்துகொள்ள முடிகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

விளம்பரம்

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment