CWC அஸ்வின் நடிக்கும் செம்பி படத்தின் ட்ரைலர் வெளியாகியது

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஸ்வின்.இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல வெப் சீரிஸ் மற்றும் படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.பட வாய்ப்பு தேடி வந்த அவருக்கு இறுதியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் முகம் ஒரு நிமிடம் தெரிந்தாலே பிரபலம் ஆகிவிடலாம் என அனைவருக்கும் தெரியும்போது அது அஸ்வினுக்கு மட்டும் தெரியாதா என்ன.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையும் காட்டினார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது பொன்னியின் செல்வன் 2 GLIMPSE... சோழர்கள் ஆட்டம் ஆரம்பம்

CWC அஸ்வின் நடிக்கும் செம்பி படத்தின் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ட்ரிடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலெர் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிங்கம் போல விமான நிலையத்தில் நடந்து வந்த தளபதி விஜய்... மனுஷனை பார்த்தாலே எனெர்ஜி வந்துடுதே நமக்கும்

CWC அஸ்வின் நடிக்கும் செம்பி படத்தின் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

இப்படத்தில் நடிகர் தம்பி ராமைய்யா ,தொகுப்பாளர் ஆண்ட்ருஸ் ,கோவை சரளா நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.வழக்கம் ஆன பிரபு சாலமன் படம் போல இப்படமும் மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.பிரபு சாலமன் படம் என்றாலே அது மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும்படி தான் அமைந்திருக்கும்.இப்படத்தில் விக்ரம் பிரபுவை போல அஸ்வினுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  யாத்ரா வாடா வாடா... ஓட்டப்பந்தயத்தில் கோப்பை வென்ற நடிகர் தனுஷ் மகன்கள்

விளம்பரம்

Embed video credits : Trident Arts

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment