ஷபானா ரேஷ்மா-க்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.! ஒரே படத்தில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோழிகள்

சீரியல் நடிகைகள் ரேஷ்மா ஷபானா இருவரும் ஒரே படத்தில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த முக்கிய நடிகைகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் “பகையே காத்திரு” என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி என்ற சீரியலில் நடித்து வந்தவர் நடிகை ஷபானா. இவர் தற்போது சன் டிவியில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். விரைவில் அந்தத் தொடர் டெலிகாஸ்ட் ஆக இருக்கிறது. செம்பருத்தி சீரியலுக்கு பின்னர் ஷபானா மிகவும் அறியப்பட்டவராக இருக்கிறார். அவர் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் சீரியலில் நடித்து வந்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷபானா ரேஷ்மா-க்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.! ஒரே படத்தில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோழிகள் 1

விளம்பரம்

அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பான “பூவே பூச்சூடவா” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். நடிகை ரேஷ்மா இவரு அதே சீரியலில் நடித்த மதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து கலர்ஸ் தமிழில் “அபி டெய்லர்” என்ற சீரியலில் நடித்தனர். ஆனால் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கியதால் ஒரே மாதத்தில் அந்த சீரியலை முடித்தது கலர்ஸ் டிவி. இந்த நிலையில் “பகையை காத்திரு” என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் இவர்கள் இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஷபானாவும், ரேஷ்மாவும் நெருங்கிய தோழிகள். இருவரும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஓணம் பண்டிகையை இருவரும் சேர்ந்தே கொண்டாடி இருந்தனர்.

ஷபானா ரேஷ்மா-க்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.! ஒரே படத்தில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோழிகள் 2

விளம்பரம்

இந்த நிலையில் இருவரும் ஒரே திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ளனர். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் பலரும் ஷபானா மற்றும் ரேஷ்மாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஷபானா ரேஷ்மா-க்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.! ஒரே படத்தில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோழிகள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment