புள்ளினங்காள் பாடலை பாடிய பம்பா பாக்கியா காலமானார்

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றது.இப்பாடலை பாடியவர் தான் பம்பா பாக்கியா.பிரபல இசைக்கலைஞர் பம்பா போல இவரின் இசைஞானம் உள்ளதால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இவருக்கு பம்பா என்ற பட்டத்தினையும் சேர்த்து கொடுத்தார்.புள்ளினங்காள் பாடலால் இவரது குரல் எட்டுத்திக்கும் ஒலித்தது.மேலும் சர்க்கார் படத்தில் இவர் பாடிய சிம்டங்காரன் என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது

கட்டாயம் படிக்கவும்  சாமி பக்தின்னு வந்துட்டா யோகி பாபுவை அடிச்சிக்கவே முடியாது....விநாயகரை விரும்பி கும்பிடும் நடிகர் யோகி பாபு

புள்ளினங்காள் பாடலை பாடிய பம்பா பாக்கியா காலமானார் 1

விளம்பரம்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு மிக நெருக்கமானவர் பம்பா பாக்கியா.பொன்னியின் செல்வன் படத்தில் கூட பொன்னி நதி என்ற பாடலை பம்பா பாடியுள்ளார்.மேலும் சர்வம் தாளமயம் ,இரவின் நிழல் என பல படங்களிலும் இவர் குரல் ஒலித்துள்ளது.முக்கியமாக ஏ ஆர் இசையில் உருவாகும் படங்களில் இவர் பாடிய பாடல் கட்டாயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது,உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அறந்தாங்கி நிஷாவை அடித்து தள்ளிய கணவர் ரியாஸ்..ஐயோ பாவம் நிஷா

புள்ளினங்காள் பாடலை பாடிய பம்பா பாக்கியா காலமானார் 2

விளம்பரம்

49 வயதாகும் பம்பா ஆரம்பத்தில் இசை கச்சேரிகளில் பாடி வந்தார்,பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தமிழ் மொழி மட்டுமில்லாமல்,கன்னடம் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார்.இவர் மறைவு ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினருக்கு என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரது மறைவு ஏற்றுக்கொள்வதாக இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் மேலும் அவரது இறப்பிற்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment