The Indian Times

தனுஷுக்கு TOUGH கொடுக்கும் சிவகார்த்திகேயன்… இருவரின் படங்களை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முன்னணி நடிகர்களையெல்லாம் ஓரம்கட்டி தற்போது இவரது படம் 100 கோடி வசூலை அசால்ட்டாக செய்து வருகின்றது.இதனால் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க போட்டிகள் போட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் உடன் நெருங்கி பழகினார்.

Advertisement

தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தினை தயாரித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்று சிவகார்த்திகேயன் புகழின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.இருபின்னும் பழசை மறக்காமல் சிவகார்த்திகேயன் மேடைகளில் தனுஷ் பெயரை பல முறை கூறி இருக்கிறார்.தற்போது இருவரும் பிரிந்து தங்களது படத்தின் வேளைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.38கோடிக்கு கைப்பற்றியதாக கூறப்படுகிறது,அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தினையும் இதே அமேசான் நிறுவனம் ரூ.34 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆரம்பத்தில் தனுஷ் உடன் பயணித்து வந்த சிவகார்திகேயன் படங்கள் தற்போது தனுஷ் பட அளவிற்கு வியாபாரம் ஆகிறது என்றால் எல்லாம் சிவகார்த்திகேயன் கடின உழைப்பு என்று தான் கூற வேண்டும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in