நடக்க முடியாமல் வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்..கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்ற சிவா | Sivakarthikeyan

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். அதுமட்டும் இல்லாமல் ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் ஆனார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் மிக எளிய பிண்ணனியில் இருந்து இன்று இவ்வளவு தூரம் முன்னேறி உள்ளார். சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்திற்கு மட்டுமல்ல அவரது நகைச்சுவை திறனுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடக்க முடியாமல் வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்..கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்ற சிவா | Sivakarthikeyan 1

விளம்பரம்

 

இவர் மெரினா என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படம் மிக பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது. நடிப்பு மட்டும் இல்லாமல் கனா என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். பிறகு கோல மாவு கோகிலா என்ற படத்தில் எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சுடி என்ற பாடலை எழுதி பாடலாசிரியராகவும் மாறினார். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

நடக்க முடியாமல் வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்..கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்ற சிவா | Sivakarthikeyan 2

 

விளம்பரம்

இவர் தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் Beast படத்தில் அரபிக் குத்து என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலின் Lyric வீடியோ தற்போது வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் சிவா இன்று சென்னையில் ஒரு Fan மீட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது தனது ரசிகர் ஒருவர் நடக்க முடியாமல் சிவாவை பார்க்க வந்தார். அவரை தானே சென்று மேடைக்கு அழைத்து வந்து போட்டோ எடுத்துக் கொண்டார் சிவா. இந்த செயல் அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment