தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது வழக்கு போட்ட சிவகார்த்திகேயன்..என்ன காரணம் தெரியுமா? | SivaKarthikeyan

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக 4 கோடி ரூபாய் சம்பள பாக்கி கேட்டு பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் தனது சம்பள பாக்கியை அவர் திருப்பி தரும்வரை விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் ஞானவேல் ராஜா முதலீடு செய்வதற்கு தடை விதிக்ககோரியும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வழக்கில் அவர் கூறியுள்ளதாவது “மிஸ்டர் லோக்கல் படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் பேசி 2018ம் ஆண்டு ஞானவேல்ராஜா ஒப்பந்தம் போட்டார். 2019ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு இதுவரை 11 கோடி மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது, மீதம் 4 கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது வழக்கு போட்ட சிவகார்த்திகேயன்..என்ன காரணம் தெரியுமா? | SivaKarthikeyan 1

விளம்பரம்

மேலும் 11 கோடிக்கான டிடிஎஸ் தொகையை ஏற்கனவே ஞானவேல்ராஜா பிடித்தம் செய்துள்ளதாகவும், ஆனால் அதை வருமான வரித்துறையில் செலுத்தாத காரணத்தால் 2019-2021 ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்சத்தை செலுத்துமாறு தனக்கு நோட்டீஸ் அனுப்பட்டதாகவும், அதை எதிர்த்து முன்பே வழக்கு தொடர்ந்து விட்டதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 4 கோடியையும், தன் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வரிமான வரித்துறையிடம் செலுத்த ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார். Youtube Video Code Embed Credits: IndiaGlitz

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது வழக்கு போட்ட சிவகார்த்திகேயன்..என்ன காரணம் தெரியுமா? | SivaKarthikeyan 2

விளம்பரம்

இந்த பிரச்சினைகள் முடியும்வரை ஞானவேல் ராஜா தயாரித்துவரும் விக்ரம் நடிக்கும் சீயான் 61, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் அவர் முதலீடு செய்ய தடை விதிக்கவும் அவர் தனது மனுவில் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி உரிமைகளுக்கும் தடைவிதிக்கவும் கோரியுள்ளார். சிவகார்த்திகேயன் அளித்த இந்த புகார் நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி அவர்கள் மார்ச் 31க்கு வழக்கை தள்ளிவைத்தி உத்தரவிட்டார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment