மாநாடு பட SJ சூர்யாவை கண்முன்னே கொண்டு வந்த சார்பட்டா சீன் வைரல் இளைஞர்! SJ Suryah Maanadu Movie Scene Recreation!

விளம்பரம்

இயக்குனராக திரையில் மலர்ந்து பின்பு ஹீரோவாக விஸ்வரூபமெடுத்த நபர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் SJ சூர்யா. இவர் இயக்குனராக இருந்த போதும் சரி நடிகராக இருந்த போதும் சரி மக்களை மகிழ்விப்பதில் ஒரு நாளும் தயங்கியதில்லை! இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களுக்கென இன்றளவும் தனி ரசிகர்கள் உண்டு என்பதே நிதர்சனமான உண்மை! நடிப்பிலும் இவர் சளைத்தவர் கிடையாது! ஏனெனில் மற்றவர்களை போல நடிக்காமல் இவருக்கென புது ஸ்டைல் உருவாக்கி வைத்துள்ளார்! அந்த நடிப்புக்கு மயங்காத ஆட்களே கிடையாது!

மாநாடு பட SJ சூர்யாவை கண்முன்னே கொண்டு வந்த சார்பட்டா சீன் வைரல் இளைஞர்! SJ Suryah Maanadu Movie Scene Recreation! 1

விளம்பரம்

சமீப காலமாக நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் செய்தியும் நாம் அனைவரும் அறிந்ததே! சமீபத்தில் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் கூட தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் காக்கி போலீசாக தனக்கே உரிய சிறப்பான நடிப்பால் கலக்கி இருப்பார்! சிம்புவுக்கு பல வருடங்கள் கழித்து அசுர வெற்றி கொடுத்த படம் என்றால் அது மாநாடு படம் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமே! இந்நிலையில் சிம்புக்கு எதிராக நடித்திருந்த SJ சூர்யாவுக்கும் அதற்கு இணையான ரசிகர்கள் உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்! அவ்வாறு இருக்கையில் அவர் படத்தில் பேசிய ஒரு வசனம் தான் “வந்தான்-சுட்டான்-செத்தான்-ரிபீட்டு”

மாநாடு பட SJ சூர்யாவை கண்முன்னே கொண்டு வந்த சார்பட்டா சீன் வைரல் இளைஞர்! SJ Suryah Maanadu Movie Scene Recreation! 2

விளம்பரம்

இந்த வசனத்தை அவர் திரையில் பேசும் பொழுது அரங்கம் முழுவதும் கைதட்டும் சத்தம் பயங்கரமாக ஒலித்தது! அந்த அளவுக்கு பிரபலமான இந்த வசனத்தை பலரும் தனக்கு ஏற்ற வாறு நடித்து வருகின்றனர்! அந்த வரிசையில் சார்பட்டா பரம்பரை படத்தில் உள்ள வாத்தியார் சீனை சிறப்பாக நடித்து அசத்தி இணையத்தில் வைரலாக இளைஞர் தான் விஷ்வா மித்ரன்! அவர் தற்பொழுது SJ சூர்யா பேசி நடித்த அந்த வசனத்தை அவரை போலவே இவரும் நடித்து அந்த வீடியோவை தனது சமூகவலைத்தள கணக்கில் பதிவு செய்துள்ளார்! அந்த வீடியோ வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment