The Indian Times

Don படத்தின் நடுவிலேயே வெளிவந்த சிவகார்த்திகேயன் | அவருக்கே படம் பிடிக்கலை போல Comment அடிக்கும் நெட்டிசன்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,மனோபாலா ,சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணி முதல் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.காலை முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தினை கண்டு ரசித்து வருகின்றனர்.காலை 4 மணி காட்சியை காண நடிகர் சிவகார்த்திகேயன் ரோகினி திரையரங்கில் டான் படத்தினை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்துள்ளார்.மேலும் படக்குழுவினரும் ரசிகர்களுடன் படத்தினை கண்டு மகிழ்ந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று முதல்நாள் காட்சியை சிவகார்த்திகேயன் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே பாதியிலேயே எழுந்து வெளிவந்துள்ளார்.இவரை ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கை காரர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர்.இந்த வீடியோவை கண்ட சிலர் அவருக்கே படம் பிடிக்கல போல அதன் வெளியே வந்துட்டாரு என கமெண்ட் செய்து வருகின்றனர்.பாதிலேயே எழுந்து செல்வது குறித்து நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்ட பொழுது இன்னோரு தியேட்டர் போறேன் படம் பார்க்க என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Embed video credits: thanthi Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in