The Indian Times

சினேகன், கனிகாவிவை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து அன்பை பொழிந்த வனிதா | Vanitha Vijayakumar

பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்று வருகிறது. BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. தற்போது இதில் சினேகன், தாடி பாலாஜி, ஷாரிக், அபிநய் என்று பலரும் வெளியேறிவிட்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் வனிதா. இவர் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து தானாக முன்வந்து விலகிவிட்டார் வனிதா. விலகலுக்குப்பின் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். மேலும் பேட்டிகளில் பிக்பாஸை விட்டு விலக காரணம் என்ன? என்று கேட்டபோது, அந்த வீட்டில் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர் பிக்பாஸ் தவறான பாதையில் போய் கொண்டிருக்கிறது. அதனால்தான் கமல் சாரே இந்த நிகழ்ச்சியிருந்து சப்பைக் காரணம் கூறி விலகியுள்ளார் என அதிரடி காரணங்களை கூறி விலகிவிட்டார்.

Advertisement

தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சினேகன், தாடி பாலாஜி ஆகியோர் வனிதா வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு வனிதா விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இருக்கும் புகைப்படத்தை வனிதா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in