The Indian Times

சூரி பெயரில் வந்த போலியான விளம்பரம்;கடுப்பாகிய சூரி எச்சரிக்கை விடுப்பு

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெட்ரா பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.அதில் ஒரு தனியார் அறக்கட்டளை நிறுவனம் சூரி புகைப்படத்தினை விளம்பர நோட்டீஸில் அச்சடித்து பொறியியல் படிப்புக்கான சேர்க்கை முற்றிலும் இலவசனம் என விளம்பரப்படுத்தியுள்ளனர்.இதனை பார்த்த சூரி கடுப்பாகி,தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,இந்த விளம்பரத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த புகைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்டது- அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை வடிவமைத்துள்ளனர்.விளம்பரங்கள் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் என சொல்லி இருக்கிறோம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ப்படும் . நாங்கள் செய்யும் கல்வி உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம், இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரங்கள் தந்து புனிதமான கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்த சமுதாயத்துக்கு என்றுமே நல்லதில்லை என தெரிவித்துள்ளார்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in