நடிகர் பிளாக் பாண்டியை வாழ்த்திய இலங்கை அமைச்சர்…..ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பிளாக் பாண்டி.இவரது இயற்பெயர் லிங்கேஸ்வரன்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் என்ற தொடரில் பிளாக் பாண்டி நடித்து மிக பிரபலமாகினார்.எனவே இந்த பெயரையே ரசிகர்கள் இவருக்கு அடைமொழியாக வைத்து விட்டனர்..தற்போது வரை ரசிகர்கள் வைத்துள்ள இந்த பெயரையே கடைபிடித்து வருகிறார்.இவர் சினிமாவில் 2000 ஆம் ஆண்டில் வெளியாகிய கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ரஜினியின் லால் சலாம் போஸ்டரை கேலி செய்து வெளியாகியுள்ள மீம்ஸ்கள் இதோ

நடிகர் பிளாக் பாண்டியை வாழ்த்திய இலங்கை அமைச்சர்.....ஏன் தெரியுமா? 1

விளம்பரம்

இவர் நடித்த அங்காடி தெரு படம் இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பல தமிழக மக்களை சென்றடைந்தார் பிளாக் பாண்டி.இவர் இறுதியாக தமிழில் நடித்த படம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய ஜில்லா படம் தான்.இப்படத்திற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.படவாய்ப்புகள் தற்போது இல்லாததால் தனக்கு கிடைக்கும் வருமானத்தினை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் பிளாக் பாண்டி.இது பலருக்கும் தெரிவதில்லை காரணம் விளம்பரம் இவருக்கு பிடிக்காது என்பதால்.தனது சொந்த வருமானத்தின் மூலம் 100 ஏழைகளுக்கு வாரம்தோறும் உணவு வழங்கி வருகிறார் பிளாக் பாண்டி.

கட்டாயம் படிக்கவும்  முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இமான் புகைப்படங்கள் இதோ

நடிகர் பிளாக் பாண்டியை வாழ்த்திய இலங்கை அமைச்சர்.....ஏன் தெரியுமா? 2

விளம்பரம்

மேலும் கஷ்டப்படும் பல குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.இந்நிலையில் ஸ்ரீலங்காவில் பொருளாதாரம் சரிந்து மக்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் பிளாக் பாண்டி ,இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.இதனை பார்த்து படித்த அமைச்சர் நடிகர் பிளாக் பாண்டிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்,அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது,தமிழக மக்களிடம் இருந்து பொருட்களை சேகரித்து இலங்கைக்கு நீங்கள் உதவ முன் வந்திருப்பது தமிழ் மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடி உறவை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது.நீங்கள் பணியை தொடங்குங்கள் நான் கப்பல் அனுப்பி பொருட்களை பெற்றுக்கொள்வதாக கூறி அவரை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார்.இந்த செய்தி வெளியாகியதை கேட்டு மக்கள் அனைவரும் நடிகர் பிளாக் பாண்டியை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நீ தப்பு பண்ணலையோ ரொம்ப நல்லவனோ விஷ்ணுகாந்தை கிழித்தெடுத்த சம்யுதா

விளம்பரம்

Embed video credits : Indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment