தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள்,அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.சன்பிக்சர் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்
தற்போது சூப்பர் ஸ்டார் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனது அப்பா ஸ்டைலாக அமர்ந்து போன் நோண்டி வரும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் ரசிகர்களுக்கு விஜயதசமி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in