சிறந்த அணியை கட்டமைக்க முயற்ச்சி செய்வதால் ரெய்னாவை எடுக்கவில்லை CSK கொடுத்த விளக்கம் | IPL

சிறந்த அணியை கட்டமைக்க முயற்ச்சி செய்வதால் ரெய்னாவை எடுக்கவில்லை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கொடுத்த விளக்கம்

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் சிறந்த ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இவர் 12 ஆண்டுகளாக சென்னை அணிக்காக ஆடி வருகிறார். நேற்று நடந்த ஏலத்தில் இவரை யாரும் எடுக்கவில்லை. இது சுரேஷ் ரெய்னா மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் என்றாலே ஒரு கொண்டாட்டம் தான். அதிலும் குறிப்பாக இந்திய ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். கிரிக்கெட் வீரர்கள் போன்று உடை அணிவது, அவர்கள் நடிக்கும் விளம்பரத்தில் வரும் பைக் வாங்குவது, அவர்களை போலவே முடி திருத்தும் வைத்து கொள்வது என்று கிரிக்கெட் ரசிகர்கள் என்று சொல்வதை விட கிரிக்கெட் வெறியர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் ரசிகர்களுக்காகவே ஐபிஎல் நடத்த பட்டு வருகிறது . கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம், அரபு நாடுகளில் நடந்த போட்டிகளால் சற்று சுணக்கம் குறைந்து காணப்பட்டது ஐபிஎல். இந்த முறை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

சிறந்த அணியை கட்டமைக்க முயற்ச்சி செய்வதால் ரெய்னாவை எடுக்கவில்லை CSK கொடுத்த விளக்கம் | IPL 1

ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏலம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை தொடக்க ஆட்டக்காரரான டூப்ளிஸிஸ் (FAF Du Plessi) பெங்களூரு அணிக்கு சென்று விட்டார். இவரை பெங்களூரு அணி 7 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். அதேபோல சுரேஷ் ரெய்னாவை எடுக்காததால் இன்னும் ஏமாற்றம் அதிகரித்துள்ளது. இந்த முறை ஐபிஎல் இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று சென்னை அணியில் மீண்டும் பிராவோ 4.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். பிராவோ 2011 முதல் சென்னை அணியில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. ராபின் உத்தப்பா 2 கோடிக்கு எடுத்துள்ளனர்.

விளம்பரம்

சிறந்த அணியை கட்டமைக்க முயற்ச்சி செய்வதால் ரெய்னாவை எடுக்கவில்லை CSK கொடுத்த விளக்கம் | IPL 2

சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் CEO நாங்கள் சுரேஷ் ரெய்னாவை மிகவும் மிஸ் செய்வோம் என்றும், அவர் 12 ஆண்டுகளாக சென்னை அணிக்காக ஆடி வருகிறார் அவருடைய பங்களிப்பை மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார். சிறப்பான அணியை கட்டமைக்கும் முயற்ச்சியில் உள்ளதால் இந்த புதிய ஆட்டத்திற்கு அவர் பொருந்த மாட்டார் என்பதால் சுரேஷ் ரெய்னாவை இந்த முறை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒரு முறை ஒரு பேட்டியில் ரெய்னா இவ்வாறு கூறினார். 2022ல் தோனி இல்லாத ஐபில் போட்டியில் நான் பங்கேற்க மாட்டேன் என்று ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வருடம் தோனியுடன் ரெய்னா பங்கேற்கவில்லை . தோனியை பெரிய தலை என்றும், சுரேஷ் ரெய்னாவை சின்ன தலை என்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்கள் அழைப்பார்கள். ரெய்னா மற்றும் டுப்லெஸிஸ்-ஐ எடுக்காத சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.சின்ன தலயை நாங்களும் மிஸ் பண்ணுவோம் என்று ரெய்னாவுக்கு ஆதரவாக மீம்ஸ் பரந்த வண்ணம் உள்ளன.  Watch the Below Video….

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment