The Indian Times

சூர்யாவை கண்ட உடன் மகிழ்ச்சியில் குதித்த FAN GIRL

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியை அளித்தது.அதனை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது பபடமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.மேலும் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா பான் இந்தியா படம் ஒன்றை இயக்க உள்ளார்.உலகம் முழுவதும் 10 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

Advertisement

இந்நிலையில் நடிகர் சூர்யா சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.அங்கு அவரை கண்ட ரசிகை மகிழ்ச்சியில் குதித்து அவருடன் செல்பி எடுக்க கோரியுள்ளார்,உடனே சூர்யா மாஸ்க்கை கழட்டி அவருடன் செல்பி எடுத்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ரசிகர்களை மதிக்க தெரிந்தவர் சூர்யா என அவரை பாராட்டி வருகின்றனர்

https://www.youtube.com/shorts/bv3-0wil5j8

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in