The Indian Times

பாகுபலியை விரட்டி அடிக்க இருக்கும் சூர்யா 42 – SURIYA42 MOTION POSTER

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது படமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.இப்படி தொடர்ந்து நடித்து வரும் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மீண்டும் அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்களிலும் இவர் தேசிய விருதினை பெறுவார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

Advertisement

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.சூர்யாவுக்கு கதாநாயகியாக திஷா பட்டாணி இப்படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Embed video credits : STUDIO GREEN

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in