The Indian Times

எந்த பிரச்சனையும் நடந்துடகூடாது..சென்னை காவல் துறையிலிருந்து பறந்த உத்தரவு | Etharkkum Thunithavan

நாளை வெளியாகவுள்ளது எதற்கும் துணிந்தவன் திரைப்படம். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தை இயக்குநர் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. மீண்டும் சூர்யா மற்றும் பாமகவினர் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

Advertisement

கடலூரைச் சேர்ந்த பாமகவினரும், வன்னியர் கூட்டமைப்பும் கடலூரில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்தை திரையிடக்கூடாது என பாமக சார்பில் கடிதம் அனுப்பி எச்சரித்து இருந்தனர். சூர்யா மற்றும் பாமவிற்கு நடுவில் ஏற்கனவே ஜெய்பீம் பட காலண்டர் சர்ச்சை நிலவி வருகிறது. சூர்யா விளக்கம் கொடுத்து அறிக்கைகள் கொடுத்தார். ஆனாலும் இரு பக்கமும் காரசார விமர்சனங்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து காலண்டரில் லெட்சுமி படம் மாற்றப்பட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. Youtube Video Code Embed Credits: ThanthiTV

Advertisement

தற்போது எதற்கும் துணிந்தவன் படத்திற்கு புது சிக்கல் உருவாகியுள்ளது. கடலூர் பாமக மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயவர்மன் இந்த மாவடத்தில் எங்கும் படம் திரையிடக்கூடாது என எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அவரை தொடர்ந்து சேலம் கரூரிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் சூர்யா அவர்களின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the video below..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in