விபத்தில் இறந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற சூர்யா…அந்த மனசு தான் சார் கடவுள்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்,இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் சூர்யா.தொடர்ந்து நல்ல படங்களை அளிக்க முயற்சி செய்தும் வருகிறார்.அண்மையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெண்களுக்காக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து அதில் வெற்றியும் பெற்றார்.திரையில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் தரையிலும் ஹீரோவாக இருக்க கூடியவர் சூர்யா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

விபத்தில் இறந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற சூர்யா...அந்த மனசு தான் சார் கடவுள் 1

விளம்பரம்

இதனால் தான் என்னமோ இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.தனது அகரம் குழுமம் மூல பல ஏழை குழந்தைகளையும் டாக்டராக,பொறியாளராக உருவாக்கியவர்.மேலும் பலரை உருவாக்கியும் வருகிறார்.இதனால் தான் இவரை அனைவருக்கும் அதிகளவு பிடிக்கிறது.தனக்கு காசு வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் மக்களுக்கு போகத்தான் மீதி காசு எனக்கு என்று வாழும் இவருக்கு இணையாக எதுவுமே ஈடாகாது.இவரது அகரம் குழுமத்தில் படித்த பலர் தற்போது நல்ல நிலைமையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ

விபத்தில் இறந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற சூர்யா...அந்த மனசு தான் சார் கடவுள் 2

விளம்பரம்

இத்தகைய நல்ல மனிதர் சூர்யா.நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் பைக்கில் ஜெகதீஷ் சென்று கொண்டு இருந்த பொழுது வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று அவரது பைக்கின் மீது மோதியது.இதனால் படுகாயமடைந்த ஜெகதீஷ் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்தார்.இவர் கடந்த 3 ஆண்டுகளாக சூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது ரசிகர்  இறந்த செய்தி கேள்விப்பட்டு அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.மேலும் அவர் குடும்பத்தினரையும் கண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை கண்ட சூர்யா ரசிகர்கள் நெகிழ்ந்து இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முதல்வன் பட நாயகி மனிஷா கொய்ராலாவின் தற்போதைய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment