The Indian Times

சர்ச்சையை கிளப்பிய தாய் கிழவி பாடல்…எழுந்த கண்டனம்

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

Advertisement

தற்போது இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார் நடிகர் தனுஷ்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷிக்கண்ணா,பிரியா பவானி சங்கர்,நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைக்க சன் பிக்ஸர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த முதல் பாடலான தாய்க்கிழவி பாடலை நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.இந்நிலையில் இப்பாடலில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி பாடல் வயதானவர்களை இழிவு படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக நடிகர் தனுஷுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவன தலைவர் ஆன சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,வயதான உறவுகளை தாத்தா பாட்டி என்று அழைத்த காலம் உள்ளது,அதனை சீரழிக்கும் விதமாக தாய்க்கிழவி என்ற பாடல் வெளியாகியுள்ளது.,தவறான வரிகளை கொண்டு பாடல் எழுதிய தனுஷுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் தாய்க்கிழவி எனும் வரியினை நீக்கி பாடலை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in