The Indian Times

தளபதி விஜய் பின்னால் துரத்தி சென்று விபத்தில் சிக்கிய ரசிகர்கள்… விஜய் கண்டுக்கவில்லை என புகார்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும்.

Advertisement

இவர் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக வெளியாக உள்ளது.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை தளபதி விஜய் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்துள்ளார்.அங்கு ரசிகர்களும் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,மீட்டிங் முடிந்து விஜய் தனது காரில் கிளம்பினார்.அவரது ரசிகர்கள் பைக்கில் அவர் பின்னாலயே சென்றுள்ளனர்.அதில் பின்னால் பைக்கில் சென்ற விஜய் ரசிகர்களில் சிலர் அதிக வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கூறிய ரசிகர்கள்,இந்த விபத்தை பார்த்த பின்பும் விஜய் எங்களை கண்டுக்காமல் சென்றுவிட்டதாக அவரது ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in