THE LEGEND திரை விமர்சனம் இதோ…RATING 2/5

சரவணா ஸ்டார் சரவணன் முதல் முறையாக நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பினை மக்களிடம் கிளப்பியுள்ளது.இதனால் படத்தினை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.அதன்படி இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சென்னையில் அதிகாலை 4 மணிக்கே படம் திரையிட தொடங்கப்பட்டு ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் MAKING புகைப்படங்கள் வெளியாகியது...

THE LEGEND திரை விமர்சனம் இதோ...RATING 2/5 1

விளம்பரம்

படத்தின் கதை

விஞ்ஞானியாக இருக்கும் சரவணன் பல சாதனைகளை செய்து வருகிறார்.இந்நிலையில் சொந்த ஊர் மக்களுக்கு நல்லது எதாவது செய்யவேண்டும் என தனது சொந்த ஊருக்கு வரும் சரவணன் அங்கு தனது தாத்தா உருவாக்கிய கல்லூரியை எடுத்து நடத்துகிறார்.இந்நிலையில் அவர் அங்கு தனது நண்பர் ரோபோ சங்கரை சந்திக்கிறார்,ஆனால் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் எல்லோரும் சக்கரை வியாதியால் அவதிப்பட்டு வருகின்றனர்,ஒரு கட்டத்தில் சக்கரை நோயினால் ரோபோ சங்கர் இறக்கவே இனி யாருக்கும் சக்கரை வியாதி இருக்கவே கூடாது என அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்,இதற்கு பல தடைகள் வர அதை எப்படி சரிக்கட்டி வெற்றிபெற்றாரா?மருந்து கண்டுபிடித்தாரா என்பது தான் மீதி கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  துருவ் விக்ரம் இயக்கி பாடிய ஆல்பம் வீடியோ வெளியாகியது

THE LEGEND திரை விமர்சனம் இதோ...RATING 2/5 2

கதை அலசல்

விளம்பரம்

53வயதில் ஆக்ஷன்,ரொமென்ஸ்,நகைச்சுவை என தனது பங்களிப்பை 100 சதவீதம் கொடுத்து மக்களை ஈர்த்துள்ள்ளார்.கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி வாரி அவரது நடிப்பினை சிறப்பாக நடித்துள்ளார்,ஹிந்தி நடிகை ஊர்வஷி நடிப்பும் மட்டும் கருத்து சொல்லும் விதமாக அமையவில்லை.ரோபோ சங்கர் நடிப்பில் பிரித்து எடுத்துள்ளார்,மேலும் அண்ணனாக வரும் பிரபு நடிப்பு அணுபவத்தின் மொத்த பிரதிபலிப்பையும் காட்டியுள்ளார்.யோகிபாபு,நாசர்,சிங்கம்புலி என அனைவரும் தங்களது நடிப்பினை அருமையாக நடித்துள்ளனர்.இவர்களுடன் ஒப்பிடும்பொழுது சரவணனின் நடிப்பு சற்று குறைவாகவே தெரிகிறது.அடிக்கடி சண்டை காட்சிகளும்,பாடல்களும் ரசிகர்களுக்கு சலிப்பினை ஏற்படுத்துகிறது.இயக்குனர்கள் ஜெடி ஜெரி இம்முறை ரசிகர்களை மகிழ்விக்க தவறிவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.படத்தின் நீளத்தினை குறைத்து இருக்கலாம்,இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்,மற்றும் பாடல்கள் சண்டைக்காட்சிகளை குறைத்திருக்கலாம் இவைகளை செய்திருந்தால் இப்படம் ஓகே என்று சொல்லும் அளவிற்காகவாது இருந்திருக்கும்.

கட்டாயம் படிக்கவும்  பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் அரிய புகைப்படங்கள் இதோ

ரேட்டிங்: இந்த கதைக்காக 2/5 ரேட்டிங்கினை வழங்குகிறது தி இந்தியன் டைம்ஸ்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment