தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் .ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது.ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்.
இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் என தகவல் வெளியாகியுள்ளது.அந்த வரிசையில் இந்த வாரம் நாமினேஷனில் ADK, ராம்,கதிரான,ஜனனி,ஆயீஷா மற்றும் அசீம் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.இதில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் ஹாட் ஸ்டார் அப்ளிகேஷன் சென்று VOTE செய்யலாம் அல்லது இதை விட எளிதாக VOTE செலுத்தவேண்டும் என்றால் https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற தளத்திற்கு சென்று அங்கு தாங்கள் விரும்பும் நபருக்கு VOTE செய்யலாம் மேலும் அதில் யார் முதலில் உள்ளார்கள்,யார் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளார் என நீங்களே எளிதாக தெரிந்துகொள்ளலாம்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in