நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.துணிவு படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
துணிவு படத்தில் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன.தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா படம் பார்த்து கூறிய கருத்து ஒன்று இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.அதில் அவர் கூறியதாவது,இப்பொழுதுதான் பார்த்தேன்,நிறைய பட்டாசுகளை வாங்கி வச்சிக்கோங்க என ரசிகர்களுக்கு படம் தாறுமாறாக உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.இவர் படத்தினை கூறுகிறாரே அல்லது ட்ரைலரை கூறுகிறாரா என்பதி தெரியவில்லை,மேலும் சிலர் இது அவரது ஒரிஜினல் கணக்கு இல்லை என்று கூறி வருகின்றனர்.எது எப்படியோ படத்தின் ட்ரைலர் வந்தால் உண்மை தெரிந்துவிடும்.