The Indian Times

குழந்தையை போல பாட்டு பாடும் புலிக்குட்டி – வைரல் வீடியோ

காட்டில் வாழும் புலி என்றாலே பார்க்கும் அனைவருக்கும் பயம் அது உறுமும் சப்தம் கேட்டால் அவ்வளவு தான் மனதின் அடி ஆழத்தில் இருந்து பயம் உச்சிக்கு ஏறும். ஆனால் இங்கு ஒரு புலி சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு காரியத்தை செய்கிறது பாருங்கள்.

ரஷியா நாட்டில் பர்னால் எனும் பகுதியில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் பிறந்து எட்டு மாதம் ஆன புலி ஒன்று சற்றும் எதிர்பாராத வகையில் உறுமுவதற்கு பதிலாக பாடும் வகையில் குரல் கொடுத்து வருகின்றது. இதனை பார்க்க அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் திறண்டு வருகின்றனர்.

Advertisement

ஆம் இந்த புலியின் பெயர் ஷெர்ஹான் இந்த புலி இந்த உலகிற்கு வந்து எட்டு மாதம் ஆகிறது. ஆனால் இந்த புலி புலியை போல உறுமாமல் தற்போது பாட்டு பாடுவது போல உறுமி வருகிறது. இந்த புலி பிறந்தது முதல் இவ்வாறு தான் ஓசை எழுப்புகிறது என்கிறார் அந்த விலங்கியல் பூங்காவில் பணிபுரியும் ஒருவர்.

இந்த அதிசய நிகழ்வை காண்பதற்கு அந்த நாட்டில் பல பகுதியில் இருந்து மக்கள் திரண்டு வந்து பார்த்து செல்லுகின்றனர். புலி ஷெர்ஹான் தனது பாட்டின் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in