சென்னைக்கு வந்த பிரபல யூடியூபர்..மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்த சாலை..யாருனு பாருங்க | Youtuber TTF Vasan

விளம்பரம்
விளம்பரம்

யூடியூப்பில் பல வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. சமையல், பொழுதுபோக்கு, பாட்டு, படம், ட்ரைலர், டீசர் என தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது யூடியூப். முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி டேட்டாவை வைத்துக் கொண்டு எண்ணி எண்ணி செலவழித்த காலம் எல்லாம் போய் இன்று ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா கொடுத்தும் பற்றாக் குறைக்கு பூஸ்டர், Add on பேக்குகள் போட்டு உபயோகிக்கும் காலம் வந்துவிட்டு. நேரத்தை வீணாக விரையும் செய்வதில் யூடியூப்பின் பங்கு அளப்பரியது. கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு யூடியூப் மிகப்பெரிய வரம். மடியில் போனை வைத்துவிட்டு ரைம்ஸ் பாடலை போட்டு விட்டு பிள்ளைகள் அழுகையை சாமர்த்தியமாக நிறுத்திவிடும் மார்டன் தாய்மார்களுக்கு யூடியூப் ஒரு வரம்தான்.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னைக்கு வந்த பிரபல யூடியூபர்..மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்த சாலை..யாருனு பாருங்க | Youtuber TTF Vasan 1

விளம்பரம்

கடுமையான போட்டி உள்ள ஒரு தளம் அதிலும் குறிப்பாக சமையல். எங்கு திரும்பினாலும் சமையல் வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. சிலர் டிக்டாக்கில் இருந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து இன்று லட்சக்கணக்கில் சம்பாதித்து கார் வாங்குவது, வீடு வாங்குவது என வாழ்க்கையை வளப்படுத்தி கொண்டு இருக்கின்றனர். ஆனால் நாம் பார்க்கபோகும் இவர் சற்று வித்தியாசமனவர். பைக் ரேஸ் ஓட்டிக் கொண்டு போகும் வழியில் கஷ்டப்படுபவர்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்து பிரபலமானவர். பைக் மூலம் பல ஊர்களுக்கு பயணம் செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பல ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது யூடியூப் சேனலை பின் தொடர்பவர்கள் 18லட்சம் பேர். Youtube video code embed credits: Thanthi Tv

சென்னைக்கு வந்த பிரபல யூடியூபர்..மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்த சாலை..யாருனு பாருங்க | Youtuber TTF Vasan 2

விளம்பரம்

இந்த நிலையில் பைக்கிலேயே நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளார் வாசன். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவை டூ நேபாளம் பைக்கிலேயே செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள பிரபலமான விளையாட்டு பொருள் கடைக்கு வருவதாகவும் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை பார்க்க சூழ்ந்துகொண்டனர். ஏதோ கலவரம் ஏற்பட்டது போல காட்சியளித்தது அண்ணா சாலை ரோடு. பின்னர் கடைக்கு சென்ற போதும், கடையை விட்டு கிளம்பிய போதும் ரசிகர்கள் அவரை விடாமல் வண்டியில் பின் தொடர்ந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் வாசனை போலீசார் ஜீப்பில் அழைத்து சென்றனர். இதை பல சேனல்கள் வாசன் கைது செய்யப்பட்டார் என்று தகவல்களை கிளப்பின. அவரது வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment